செவ்வாய், 26 டிசம்பர், 2017

கணவனைப் பிடிக்காததால், கர்ப்பிணிப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை!

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தடேபள்ளிகுடம் பகுதியை சேர்ந்தவர் நாகமவுனிகா. கடந்த ஆகஸ்ட் மாதம் இவருக்கு திருமணம் நடந்தது. சங்கராந்தி (பொங்கல்) பண்டிகை கொண்டாடுவதற்காக தனது தாய்வீட்டுக்கு சமீபத்தில் வந்திருந்த நாகமவுனிகா, இன்று தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு பிணமாக தொங்கினார்.
முன்னதாக, இந்த விபரீத முடிவுக்கான காரணத்தை தனது
கைபேசியில் வீடியோவாக பதிவு செய்த இவர், தன்னை மன்னித்து விடுமாறு பெற்றோர்களை கேட்டு கொண்டுள்ளார். எனது கணவரை எனக்கு பிடிக்கவில்லை. எங்கள் திருமணத்தின்போது அவருக்கு அளித்த பணம் மற்றும் பொருட்களை அவரிடம் இருந்து திருப்பி வாங்கி விடுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார், நாகமவுனிகாவின் பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக