புதன், 6 டிசம்பர், 2017

நஸீர் அஹமடும் ரவூப் ஹக்கீமும் வாய்திறக்க வேண்டும்!

தற்போது  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  அலிசாஹிர் மௌலானா அவர்கள் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் அவர்களால்  தூற்றப்பட்டார் என்ற செய்தி குறித்து  நம்மில பலர் மூக்கு  கண் காது வைத்து கதைகளை  எடுத்துரைத்து வருகின்றோம்.

ஆனால்  இந்த சம்பவத்தை  நேரில்  கண்டவர் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மாத்திரமே .

நாம் பாதிக்கப்பட்டதாக வாக்குமூலம் அளிக்கும்  நபரின் தரப்பை  மாத்திரம்
மையப்படுத்தி  செய்திகளை  வௌியிட்டு வருவது  இஸ்லாமிய  முறைமையின் பிரகாரமும்  ஊடகங்களை நெறிமுறையின் பிரகாரமும் தவறானதாகும்,

அத்துடன்  இதில்  ஏனைய சாட்சியாளர்களாக  அடையாளங்காட்டப்படுபவர்கள் ஒரு போதும் சாட்சியாளர்களாகவே  ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள்,

போஸ்ட் மாஸ்டர்  நசீர் என்பவர் இம்முறை தேர்தலில்  குதிப்பதற்கு  மௌலானாவின் அபிமானத்தை எதிர்பார்த்திருக்கும் ஒரு வேட்பாளர் மற்றையது  மௌலானாவின்  மகன் ,

ஆகவே, இவர்கள்  இருவரும்  இங்கு  மௌலானா  ஹாபிஸ் நசீரை கொலை  செய்திருந்தால்  கூட மௌலானாவுக்கு எதிராக சாட்சியமளிக்க மாட்டார்கள் என்பது  திண்ணம்,
ஆகவே  ஒரு தரப்பினரின்  கருத்தை மாத்திரம்  கொண்டு நம்மில் பலர்  இன்று  எமது கற்பனைக் கதைகளை  கட்டவிழ்த்து விட்டு வருகின்றோம்,

இங்கு  நாம்  மற்றுமொரு  விடயத்தையும் ஆராய வேண்டியுள்ளது,
என்னவென்றால்  குற்றஞ்சாட்டுபவரின்  பின்னணியை  ஆராய்வதும் மிக முக்கியமான விடயங்களாகும்,

ஏனெனில்  கடந்த 1994 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில்   இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு முன்னரும்  தம்மை எதிர்த்தரப்பினர் தாக்கியதாக கூறி  வைத்தியசாலையில்  அனுமதி பெற்றுக் கொண்டமை அனைவரும் அறிந்த விடயம் ,

அதன் பின்னர் முன்னாள் அமைச்சர்  பஷீர்  சேகுதாவூத்தின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி விட்டு முன்னாள் அமைச்சர் தம்மை அச்சுறுத்தியதாக மக்களிடம் மன்றாடியமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

ஆகவே, இப்படியான பின்புலத்தைக்  கொண்ட  ஒருவரது  குற்றச்சாட்டு எந்தளவு  நியாய பூர்வமானது என்பதிலும் சந்தேகங்கள் உள்ளன.

ஹாபிஸ் நசீர்  மிகுந்த  கோபத்துடன் தம்மை  தூற்றியதாகக் கூறும்  மௌலானா அவர்கள் ஹாபிஸ் நசீர் மிகுந்த  கோபமடையும் அளவுக்கு என்ன சொல்லியிருப்பார் என்ற கேள்வியும் எழாமல்  இல்லை.

ஆகவே,  ஒரு தாக்கத்திற்கான  மறுதாக்கம் நிச்சியம் உண்டு என்ற விதியின் அடிப்படையிலும்  நாம் ஆராய வேண்டியுள்ளது.

மௌலானாவின்  குடும்பம்  மரியாதையானது  என்பதைப்  போல  நசீர்அஹமட் என்பவரும் ஒரு  ஹாபிழ் என்பதுடன்  அவரது  தந்தையும்  ஏறாவூரில் மதிக்கப்படும் ஒரு  ஆலிம்  என்பதை நாம் நினைவுபடுத்த வேண்டும்,
எனவே  இந்த  விடயம்  தொடர்பில்  நாமே நீதவானாகி  மௌலானாவை பரிசுத்தவானாக  எண்ணி  தீர்ப்புக்கள் கூறி  நாளை  அல்லாஹ்விடத்தில்  பதில் சொல்லுபவர்களாக மாறாமல்  மற்றைய தரப்பின்  நியாயப்படுத்தலையும்  கேட்டு விட்டு  நாம்  தீர்மானங்களை எடுப்போம்.

எனவே  இது  தொடர்பில்  ஹாபிஸ் நசீரும்  ரவூப் ஹக்கீமும்  வாய்திறக்க வேண்டியது இந்த  நேரத்தில்  மிக  முக்கியமான தேவையாகும்.

- லத்தீப்  முஜாஹிதீன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக