ஞாயிறு, 31 டிசம்பர், 2017

நாடளாவிய திறமையடிப்படையில் பல்கலை அனுமதி!

பல்கலைக் கழகங்களுக்கு தீவளாவிய திறமை (Merit), மாவட்ட ஓதுக்கீடு (Quota) என இரு அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். (1970 ல் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல்) 

குறித்த ஒரு கற்கை நெறிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில், அக்கற்கைக்கு சேர்க்கப்பட இருக்கும் எண்ணிக்கையின் 40 % மானவர்கள் தீவளாவிய திறமை அடிப்படையிலும் 55 % மானவர்கள் மாவட்டங்களுக்கு உரிய ஓதுக்கீட்டிலும் (மாவட்ட

சனத்தொகை விகிதாசார அடிப்படையில்) இறுதி 5 % போ் கல்வியில் பின்தங்கியதாக வரையறுக்கப்பட்ட 16 மாவட்டங்களுக்கும் (வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களும் உட்பட) பகிரப்படுகின்றனர்.

உதாரணத்திற்கு 2016/2017 ல் மருத்துவ கற்கைக்கு இலங்கை முழுதும் 1310 பேர் தெரிவு செய்யப்பட்டனர். எனவே இவர்களில் 524 பேர் (40%) தீவளாவிய திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர். அதாவது Island Rank 524 வரைக்குமானவர்கள் மாவட்ட ஒதுக்கீட்டிற்குள் வராமல் நேரடியாக தெரிவு செய்யப்படுவார்கள்.

எனவே எமது மாவட்டங்களில் திறமையை வெளிக்காட்டும் மாணவர்களை சற்று உந்தித்தள்ளுவதன் மூலம் அவர்களை Merit முறையில் பல்கலைக்கு அனுப்பினால் அடுத்த நிலையில் உள்ளவர்களை மாவட்ட Quota இனூடாக சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுக்க முடியும்.

தற்போது எந்த கற்கைக்கு எத்தனை merit என பலரும் வினவுகின்றனர். இதில் ஒரு சிக்கல் உள்ளது. குறித்த உயர்தர பிரிவு ஒன்றில் அனைத்து மாணவர்களும் முதலாவதாக விரும்பும் கற்கைக்கு மட்டும் மேற்குறிப்பிட்ட கணிப்பு மூலம் merit ற்குரிய Island Rank அறிய முடியும். (அவ்வாறான கணிப்பு படத்தில் காட்டப்பட்டுள்ளது - காட்டப்பட்ட கற்கைகளே முதலாவதாக விரும்பப்படுகின்றன என எடுகோள் எடுக்கப்பட்டுள்ளது) ஏனைய கற்கைக்கான merit எண்ணிக்கையானது மாணவர் விருப்பத்தெரிவுக்கு ஏற்ற வகையில் மாறிக்கொண்டிருக்கும்.

மாவட்ட Quota எண்ணிக்கையினையும் கடந்த வருடங்களின் எண்ணிக்கையை வைத்தே உத்தேசமாக குறிப்பிட முடியும்.

குறித்த மாவட்டத்திலிருந்து அதிக மாணவர்கள் பல்கலைக்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனில்
1. தீவளாவிய திறமை அடிப்படையில் செல்பவர்களை அதிகரிக்க வேண்டும்.
2. குறித்த கற்கைக்கு அதிக எண்ணிக்கையானவர்களை அரசு சேர்த்துக்கொள்ளவேண்டும்.
3. மாவட்ட சனத்தொகை அதிகரிக்க வேண்டும் (வடக்கு மாகாண மாவட்டங்களே மிகக்குறைந்த சனத்தொகை கொண்டவை)

எனவே இதில் எமக்குள்ள ஒரே வழி 1வது தெரிவே.

படத்தில் காட்டப்பட்ட எண்ணிக்கை சென்ற வருடம் பல்கலைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டவர்கள்ஆகும்.
இவ்வெண்ணிக்கை கணித விஞ்ஞான தொழினுட்ப, வர்த்தக கற்கைகளுக்கு அதிகரிப்பதற்கே இவ்வருடம் சாத்தியக்கூறுகள் உண்டு.

தகவலும் - தொகுப்பும் :
துரைராஜசிங்கம் லெனின் அறிவழகன்
உதவிக்கல்வி பணிப்பாளர் (தொழில்நுட்ப கற்கைகள்)
மாகாணக் கல்வி திணைக்களம் - வடக்கு மாகாணம் நன்றி - அன்புஜவஹர்ஷா முகநூல் பக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக