ஞாயிறு, 31 டிசம்பர், 2017

பஸ்யால எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமாவின் 'இரண்டும் ஒன்று" கவிதை நூல் வெளியீட்டுவிழா

பஸ்யால எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா எழுதிய 'இரண்டும் ஒன்று" என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா 2018 ஜனவரி 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கல்எளிய, மே.மா/மினு/அலிகார் மஹா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெறும். 

இலக்கிய புரவலர் அல்ஹாஜ் ஹாஸிம் உமர் அவர்களின் முன்னிலையில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு, கல்-எளிய மே/.மா/மினு/அலிகார் மஹா வித்தியாலய அதிபர் ஏ.ஜே.எம்.புர்கான் அவர்கள் தலைமை வகிப்பார். 

இவ்விழாவில் பிரதம அதிதியாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் அஷ்ஷேய்க் வை.எல்.எம்.நவவி அவர்களும், கௌரவிப்பாளராக நூலாசிரியரின் தந்தையும் முன்னாள்  அதிபரும் ஜே.பி யுமான அல்ஹாஜ் ஏ.சி.செய்யது அஹமது அவர்களும் கலந்து சிறப்பிக்கிறார்கள். 

கௌரவ அதிதிகளாக மல்வான அல் முஹ்ஸின் பவுண்டேசன் ஸ்தாபகர், பிரபல தொழிலாளர், சமூக ஆர்வலர் அல்ஹாஜ் எம்.எம். இஸ்மாயீல், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர், சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான கலாபூஷணம் அல்ஹாஜ் என்.எம்.அமீன், நவமணியின் செய்தியாசிரியர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஸாஜஹான், கிண்ணியா  முன்னோடிகள் கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் கலாபூஷணம்  இலக்கிய வித்தகர் பீ.ரீ.அஸீஸ்,கிண்ணியா முன்னாள் தவிசாளர், கிண்ணியா நகர சபை நிறைவேற்றுப் பணிப்பாளர் நுகர்வோர் அதிகார சபை டாக்டர். ஹில்மி மஹ்ரூப் ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.ரீ.எம்.நிஸாம், மினுவங்கொட கல்வி வலயப் பணிப்பாளர் திரு.எஸ்.கே.மல்லவாரச்சி,  கொழும்பு பல்கலைக்கழகம் சிரேஷ்ட விரிவுரையாளர் அல்ஹாஜ் எம்.எம்.எம்.ஸாபிர் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கிறார்கள். 

 நூலின் முதற்பிரதியை புரவலர் அல்ஹாஜ் ஹாஸிம் உமர் அவர்கள்  பெற்றுக் கொள்வார்.

வரவேற்பு உரையை நூலாசிரியரின் கணவரும் அலிகார் மஹா வித்தியாலயத்தின் பிரதி அதிபருமான ஜனாப் எம்.ஏ.முஹம்மது றிப்தி அவர்களும், நூலாசிரியர் பற்றிய உரையினை ஓய்வு பெற்ற தமிழ்மொழி மூல கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ்; எம்.எஸ்.அஷ்ரப் அவர்களும், கவி வாழ்த்தினை கவிஞர் மேமன்கவி அவர்களும், நூல் விமர்சனத்தை தாஜுல் உலூம் கலைவாதி கலீல் அவர்களும், வாழ்த்துரைகளை கவிஞர் கலாபூஷணம்  இலக்கிய வித்தகர் பீ.ரீ.அஸீஸ்,கலாபூஷணம் கவிமணி என். நஜ்முல் ஹுஸைன்,  தமிழ்த் தென்றல் அலிஅக்பர், ஐ.டி.என். வசந்தம் தொலைக்காட்சியின் சிரேஷ்ட செய்தியாசிரியர், தலைவர்,கலை இலக்கிய வட்டம் வரக்காப்பொலை அல்ஹாஜ் எம்.ஸித்தீக் ஹனீபா ஆகியோர்களும் நூலாசிரியர் எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா ஏற்புரையையும் நன்றியுரையையும்  நிகழ்த்த உள்ளனர். 

வலம்புரி கவிதா வட்டத்தின் செயலாளர் கவிஞர் இளநெஞ்சன் முர்சிதீன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

நூலாசிரியரின் தந்தையும் முன்னாள் அதிபரும் ஜே.பி யுமான அல்ஹாஜ் ஏ.சி.செய்யது அஹமது அவர்கள்  கௌரவிக்கப்படுவது இந்த விழாவின் விசேட நிகழ்வாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக