திங்கள், 25 டிசம்பர், 2017

நான் எக்காரணம் கொண்டும் ஐதேகவில் இணைய மாட்டேன்! - கெஹெலிய

“நான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளதாக பரவிவரும் செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்று கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான வதந்திகள் தேர்தல் அண்மிக்கும்போது வலம்வரவே செய்கின்றன எனவும் கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிடைக்கவிருக்கின்ற வாக்குகளை இல்லாதொழிக்கவே, இவ்வாறான பொய்ப்பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனக் குறிப்பிட்டுள்ள அவர், அவ்வாறான பிரச்சாரங்களைத் தான் மறுத்துரைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ என்ற நாமம், துட்டகைமுனுப் பரம்பரையில் வந்த, பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தலைவரொருவரின் நாமமாகும். தற்போதைய அரசாங்கம் அந்த நாமத்தை இல்லாதொழிக்கவே முயற்சிசெய்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக