செவ்வாய், 19 டிசம்பர், 2017

வெலிகம ஸலாஹியாவின் முதலாவது பட்டமளிப்பு விழா!

வெலிகாமம், ஸமகி மாவத்தையில் அமைந்துள்ள, ஸலாஹியா பன்னாட்டுப் பாடசாலையின் பத்தாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, பரிசளிப்பு விழா மற்றும் அல்-ஆலிம், அல்-ஹாபிழ் பாடநெறிகளைப் பூர்த்தி செய்த மாணாக்கருக்கான பட்டமளிப்பு விழா என்பன எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) பாடசாலை முன்றலில் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளன.

ஆண்கள் பிரிவில் வேறாகவும், பெண்கள் பிரிவில் வேறாகவும் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளில், ஆண்கள் பிரிவில் நடைபெறும் நிகழ்வில் பிரதம
அதிதிகளாக மக்கியா அறபுக் கல்லூரியின் அதிபர் அல்ஹாஜ் மௌலவி அபூபக்கர் (மக்கி) அவர்களும், முர்ஸிய்யா அறபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி ஸுல்தான் ஏ. முஹியத்தீன் (பஹ்ஜி) அவர்களும், அறபா தேசிய பாடசாலையின் அதிபர் ஜே.எஸ்.டப்ளிவ். வாரிஸ் அலி மௌலானா அவர்களும் கலந்துகொள்வர்.

சிறப்பதிதிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ள இந்நிகழ்வில் விஷேட பேச்சாளர்களாக ஹகீமிய்யா அறபுக் கலாசாலையின் அதிபர் அல்ஹாபிழ் மௌலவி ஹிதாயத்துல்லாஹ் (ரஹ்மானி) அவர்களும், பாரி அறபுக் கலாசாலையின் அதிபர் அல்ஹாபிழ் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான் (மழாஹிரி) கலந்துகொள்ளவுள்ளனர்.

அல்-ஆலிமாப் பாடநெறியைப் பூர்த்திசெய்த 15 ஆலிமாக்களும், ஹிப்ழ் தௌராப் பாடநெறியைப் பூர்த்திசெய்த 10 ஹாபிழாக்களும், 3 ஹாபிழ்களும் பட்டம் பெறவுள்ளனர். இந்நிகழ்வில் பன்னிரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவு நூல்களும் வெளியிடப்படவுள்ளன. 

(கலைமகன் பைரூஸ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக