வியாழன், 5 அக்டோபர், 2017

கலஹா மாதிரிப் பாடசாலை மாணவன் கண்டி மாவட்டத்தில் முதலிடம்!

நேற்று (4) வெளியாகியுள்ள ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில், கலஹா மாதிரிப் பாடசாலை மாணவன் முஹம்மது அலி ரிஷாத் 186 புள்ளிகளைப் பெற்று, கண்டி மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கலஹா மாதிரிப் பாடசாலையிலிருந்து இவ்வருடத்திலேயே முதன் முதலாகப் புலமைப் பரிசில் பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றினர் . இவர்களில் ஒரு மாணவன் மட்டுமே தேறினாலும், மாவட்டத்தில் முதலிடம் பெற்றுப் பாடசாலைக்குப் புகழ் சேர்த்துள்ளார்.
100 இற்கும் மேற்பட்ட புள்ளிகளை 10 மாணவர்களும், 70 இற்கும் மேற்பட்ட புள்ளிகளை 13 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ள ரிஷாத், கலஹா - திக்கன பத்தனையைச் சேர்ந்த முஹம்மது அலி - ரிஷ்னியா தம்பதியினரின் ஏக புதல்வராவார்.

-கலைமகன் பைரூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக