வியாழன், 29 ஜூன், 2017

மிகவும் சிறப்பாக நடைபெற்ற டொமினிக் ஜீவாவின் பிறந்தநாள் நிகழ்வு!

டொமினி ஜீவா அவர்களின்  90 வது பிறந்த தினம் வைபவம் 27.06.2017 கொழும்பில்  மட்டக்குளியில் அவரது மகன் திலீபன் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஜீவா அவர்கள் மீதான அபிமானக் கொண்ட கலை இலக்கிய நண்பரகள் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினர்.

அத்தோடு தொலைபேசி மூலமும் பல நண்பர்கள் வாழ்த்தினர்.

முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ,எச்,எம்,அஸ்வர், வெளிப்பனை அத்தாஸ்,  பிரமீளா பிரதீபன், கே.எஸ்.சிவகுமாரன் ,தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா, கலாநிதி ந.ரவீந்திரன், பேராசிரியர் மா.கருணாநிதி, மு.தயாபரன், ச.முருகானந்தன், ஞானம் ஆசிரியர் தி.ஞானசேகரன், கே. பொன்னுத்துரை, செல்வம்,  தேசம் பத்திகையாளர் சதீஸ், ஏ.எஸ்.எம். நவாஸ்,  வீரகேசரி சங்கமம் ஜீவா சதாசிவம், வதிரிசி.ரவீந்திரன், துரைவி ராஜ்பிரசாத்  துரை விஸ்வநாதன், நடராஜன், இரா.சடகோபன், மற்றும் சிங்கள எழுத்தாளர் கமல் பெரேரா, ஸ்ரீரதரசிங், பூபாலசிங்கம், அட்டாளைசேனை முஹமது நௌபல் போன்ற பலர் கலந்து கொண்டனர்.

மேமன்கவி திலீபன் டொமினிக் ஜீவா ஆகியோரின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட  இந்த நிகழ்வில்  ஜீவா அவர்களின் 90 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு மேமன்கவி தொகுத்த ''ஜீவா பதிவுகள்-90'' ஆவணத்தொகுப்பின் சிறப்புப் பிரதி மேமன்கவி, தீலீபன் ஆகியோரால் ஜீவா அவர்களுக்கு கையளிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக