புதன், 28 ஜூன், 2017

மருதமுனையில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்! நீதிமன்றில் தெரிவிப்பு

கரையோரம் போணல் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அதிகாரிகள் சிலர் பொதுமக்களிடம் லஞ்சம் பெற்று வருவதாக கல்முனை நீதவான் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மருதமுனை மக்பூலியா வாசிப்பக முன்றலில் சமூக சேவைப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கல்முனை நீதிமன்றில் போடப்பட்ட வழக்கினை விசாரித்த போதே பொதுமக்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கல்முனை
நீதவான் நீதிமன்ற நீதிபதி பயாஸ் றஸாகிடம் மேற்படி விடயத்தைச் சுட்டிக் காட்டினர்
கரையோரம் பேணல் என்ற பெயரில் மருதமுனைப் பிரதேசத்தில் திடீர் திடீரென அதிகாரிகள் உள்நுழைந்து பொதுமக்களைச் சிரமத்திற்கு உள்ளாக்கி வருவதுடன் பொதுமக்கள் விடயத்தில் பாரபட்சமாக நடந்து கொள்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பலரிடம் லஞ்சம் பெறுவதற்கு முயற்சித்துள்ளதாகவும் சிலரிடம் தொடர்ச்சியாகப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுபற்றி பொதுமக்கள் தங்களுக்கிடையே உரையாடி வருகின்றனர்
சுனாமிக்குப் பின்னர் அரசாங்கத்தின் எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டவற்றில் குறைபாடுகள் பல இருக்கிறன. கடந்த ஆட்சிக் காலத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட 65 மீற்றர் எல்லையில் மருதமுனை மக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர். எல்லை நிர்ணயச் சட்டத்தில் உள்ள தெளிவற்ற நிலையினால் சமூக சேவைகளில் ஈடுபடுகின்றவர்களும் தற்பாதுகாப்புக்காக சிரமதானங்களில் ஈடுபடுகின்றவர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்
65 மீற்றர் எல்லையில் உள்ள குறைபாடுகளைச் சாதகமாக்கி அதிகாரிகள் சிலர் மக்களை ஏமாற்றி வருவதுடன் கல்முனைப் பகுதிகளிலுள்ள கடைகள்-கரைவலை மீன் பாதுகாப்பு நிலையங்கள் மற்றும் நூல் சாயமிடும் நிலையங்கள் முதலியவைகளுக்குச் சென்று தங்களது கைவரிசையினைக் காட்டிவருவதாகவும் மேற்படி வழக்கின் போது நீதிமன்றில் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
(ஜெஸ்மி எம்.மூஸா) AN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக