ஞாயிறு, 25 ஜூன், 2017

ஹொலி ஹீரோஸின் வருடாந்த இப்தார் நிகழ்வு!

நேற்று (23) சாய்ந்தமருது ஹொலி ஹீராேஸ் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வும் புதிய சீருடை அறிமுக நிகழ்வும் கல்முனை சாஹிரா கல்லுாரியின் கேட் முதலியார் காரியப்பர் மண்டபத்தில் கழகத்தின் தலைவர் ஆசிரியர் ஏ.ஆதம்பாவா Msc அவர்களின் தலைமையிலும் ஆயுட்காலச்
செயலாளர் அலியார் பைஸர் ஆசிரியர் அவர்களின் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்றது.

இவ் இப்தார் நிகழ்வில் விளையாட்டுக் கழகங்களின் உயர்பீட உறுப்பினர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் ஹொலி ஹீராேஸ் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

அதேபோன்று இவ் இப்தார் நிகழ்வில் விசேட பயான் மற்றும் துஆ பிரார்த்தனையினை அல்-ஹாஜ் . மெளலவி ஏ.ஆர். சபா முஹம்மது ( நஜாஹி , காதிரிய்யி ) அவர்கள் நிகழ்த்தினார்.

இப்தார் நிகழ்வினைத் தொடர்து சாய்ந்தமருது ஹொலி ஹீராேஸ் கிரிக்கெட் அணிக்கான புதிய சீருடையினை பிரபல தொழிலதிபர் ஜனாப் . எம்.பஸ்மிர் ( தவிசாளர் - அதீப் பெளன்டேஷன் ) அவர்களினால் கழகத்தின் முக்கியஸ்தர்களிடம் கையளிக்கப்பட்டடது.

( ஜி.முஹம்மட் றின்ஸாத் )கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக