ஞாயிறு, 21 மே, 2017

2017 தென் மாகாணத் தமிழ் தினவிழாப் போட்டியில் அஸ்ஸபாவுக்கு மூன்று முதலிடங்கள்!

கடந்த 2017.05 18 ஆம் திகதி காலி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற தென் மாகாண தமிழ் மொழித்தின விழாப் போட்டியில் அஸ்ஸபா முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்திலிருந்து போட்டிகளில் பங்கு பற்றிய மாணவர்கள் வெற்றிச் சாதனைகளைப் படைத்துள்ளனர்.

மூவர் அகில இலங்கைப் போட்டியில் கலந்துகொள்ளத் தெரிவாகியுள்ளனர்.
எம். எப். எப். மிஸ்னா பிரிவு 4 - இலக்கண போட்டியில் முதலாம் இடத்தையும், 
 எம். எஸ்.எப். மின்ஹா பிரிவு 3, பாவோதல் போட்டியில் முதலாம் இடத்தையும், திறந்த போட்டி, முஸ்லிம் நிகழ்ச்சி - நாடகத்தில் ஆர்.எம். எம்.ரிகாஸ், எம்.ஏ. எம். ரிம்ஸி, எம்.ஆர். எம். ரிகாஸ், எம்.ஆர். எம். ரிக்ஸான், எம்.பி. எம். அப்பாஸ், எம்.பி. எம்.ஹஸ்ஸான், யூ. பி. நவீட் அஹமட், எம்.ஏ. அஷ்பாக் அஹமட் ஆகியோர் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

எம்.எஸ்.எப். ஸல்மா பிரிவு 2, பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடத்தையும்,
எம்.எம்.எப். ருமைதா பிரிவு 2, பாவோதல் போட்டியில் மூன்றாம் இடத்தையும், 
எம்.ஏ. எப். அஷ்பா பிரிவு 1, பாவோதல் போட்டியில் மூன்றாம் இடத்தையும்
பெற்றுக் கொண்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஜனாப் எம்.எஸ்.எம்.ஹிப்ளர் அவர்கள் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக