மீத்தொட்டுமுல்ல குப்பை மேடு இடிந்து விழுந்துமைக்கு கொழும்பு நகர சபையே பொறுப்பேற்க வேண்டும். காரணம் குப்பை மேட்டில் பொதுமக்கள் வேண்டாம் என்று கூறும் போதும் இரசாயன பதார்த்தமொன்றைச் சேர்த்தனர் என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஒரு மாதத்திற்கு முன்னர் தீயணைக்கும் படையினர் கொல்களன் ஒன்றில் இரசாயனத்தைக் கொண்டுவந்து விசிரினர். அதுதொடர்பில் நாங்கள் விசாரித்தபோது, குப்பை அவசரமாக உக்கிப் போவதற்காகவே இரசாயனத்தைத் தெளிப்பாகக் கூறினர்.
“அந்த இரசாயனத்தைத் தெளித்துத் தெளித்து இருப்பதை விட்டுவிட்டு, இந்த குப்பை மேட்டை இங்கிருந்த நீக்கிவிடுங்கள் என்றே நாங்கள் சொல்கிறோம். அந்த இரசாயனத்தின் மூலம் எங்களுக்கு எவ்வாறான நோய்கள் தோற்றுமோ யாருக்குத் தெரியும்?” இவ்வாறு மீத்தொட்டுமுல்லச் சுற்றுப்புற மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இதுதொடர்பில் கொழும்பு நகர சபையின் ஆணையாளர் வீ.கே. அநுரவிடம் நாங்கள் விசாரித்தபோது,
மீத்தொட்டுமுல்ல குப்பை மேட்டிலிருந்து வெளியேறுகின்ற துற்நாற்றத்தை இல்லாமற் செய்யவே நாங்கள் அந்த இரசாயனத்தைத் தெளித்தோம். நாங்கள் அதனை ஒரு பரீட்சார்த்தமாகவே செய்தோம்.
குப்பை மேடு சரிந்து விழுந்தமைக்கு அதுதான் காரணம் எனச் சொல்ல முடியாது.
கடந்த சில நாட்களாக கொழும்பில் 100 மி.மி அளவு மழை பெய்தது. குப்பை மேட்டை அண்டிய பகுதிகளில் நீர் தேங்கியிருந்தது. அதனால்தான் அவ்வாறு நிகழ்ந்திருக்கும் என நாங்கள் இப்போது சந்தேகிக்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.
தீயணைக்கும் படையைச் சேர்ந்த ஒருவர் இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது,
கொழும்பு நகர சபையின் அறிவுறுத்தலின் பேரிலேயே நாங்கள் சென்ற மாதம் குப்பைகள் உக்கிப் போவதற்கான இரசாயனிய பக்ரீரியாவைத் தெளித்தோம் எனக் குறிப்பிட்டார்.
நீருடன் கொள்கலன்கள் 50 இதற்காகப் பயன்படுத்தப்பட்டன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
(திவயின)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக