செவ்வாய், 18 ஏப்ரல், 2017

நான் இனவாதியா? மரிக்கார் வினா தொடுக்கிறார்!

“நான் ஒரு இனவாதியா?“ என்று தனது முகநூல் பக்கத்தில் வினா தொடுத்திருக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் கொலன்னாவத் தொகுதியின் அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். மரிக்கார். 

அவர் குறிப்பிட்டுள்ள கருத்தாவது -

'சிங்கள பௌத்த பாடசாலையொன்றில் கற்ற எனக்கு, ஊடகவியல் சம்பந்தமான பொறுப்புக்கள் சாட்டப்பட்டவுடனேயே,
365 நாட்களும் இரவு நேரங்களில் பொறுப்பேற்று அதிகாலை வரை ஒலிபரப்பு வேலைகளை நிறைவேற்றினேன்.

நாடு முழுவதும் அமைந்துள்ள மிகவும் கஷ்டநிலையில் நடாத்தப்பட்டுக் கொண்டிருந்த கோயில்கள் 88 இனை புனர் நிர்மானம் செய்வதற்கு ஆவன செய்தேன்.

எனது தலைமையின் கீழ் இயங்கிய ஊடகத்தின் மூலம், போயா தினங்களில் எவ்வித மாமிசங்களும் தொடர்பான விளம்பரங்களும் ஒலி-ஒளிபரப்பப்படாமல் கவனமாக இருந்தேன்.

நான் எவ்வாறான இனவாத சிந்தனையுடையவன் என நினைக்கிறீர்கள்?

எங்கள் நாட்டிலுள்ள அனைத்து மக்களும், சிங்கக் கொடியின் நிழலின் கீழ் ஒன்றுபட வேண்டும் என நினைப்பதா?

அவ்வாறின்றேல் எந்தவொரு இனத்திற்கும் பக்கச்சார்பின்றி நடந்துகொள்வதா?

என்னை அவ்விடத்திற்குத் தள்ளுவதற்கான பல வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டாலும், நான் அசையாமல் இருக்கிறேன்.

அதுவே எனது குறிக்கோளாக உள்ளது.

அது எனக்கான ஆசிர்வாதமேயன்றி, தண்டனையாகாது என்று பெரு நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக