சிலரின் சரிதங்களை வாசிக்கும்போது வியப்பும்,கோபம்,அருவருப்பு,ஆச் சரியம் மற்றும்கேவலம் ஆகிய உணர்வுகள் ஒரு சேர நம்முள் எழுகின்றன. ஆனால் சிலரின் சரிதங்கள் பல்வேறு சுவாரஷ்யங்களையும் ஆவல்களையும் ஏற்படுத்துகின்றன.இன்றைய அரசியலில் பேசுபொருளாகியுள்ள பஷீர்சேகுதாவூத்தின் சரித்த்தை புரட்டிப் பார்க்க முனைந்த தேடுதலே இந்த தொடர்,
1960 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி பிறந்தவர் தான் பஷீர் சேகுதாவூத்.முதலில் ஆசிரியத்தொழில் ஈடுபட்ட பஷீர் சேகுதாவூத், தான் பெறும் சம்பளத்துக்கு வேலை செய்யாமல் களவுத் தொழிலில் ஈடுபட்டு பின்னர் பணமோகத்தால் கொள்ளைகளில் ஈடுபட ஏதுவாக
ஈரோஸ் ஆயுத இயக்கத்தில் சேர்ந்தார்,முதலில் இவரை அரசியல் துறையில் நியமித்தாலும் முஸ்லிம் இளை ஞர்களை கடத்தி இயக்கத்தில்சேர்த்தல், முஸ்லிங்களை கொலை செய்தல் , கொள்ளை மற்றும் கப்பம் கோரல் போன்றபொறுப்புக்களையே இவர் முன்னெடுத்து வந்தார்.
பஷீர் ஈரோஸ் இயக்கத்தில் இருந்த போது முஸ்லிம் விவசாயிகளின் உழவு இயந்திரங்கள் கடத்தப்பட்டமை மற்றம் சமூக சீர்த்திருத்தம் என்ற பெயரில் பலரை தனது ஊரின் பிரதான வீதியில் பிரதேச சபைக்கு முன்னால் இவரது தலைமையில் இயங்கி வந்த சித்திரவதை முகாமில் தடுத்து வைத்து தலைகீழாக கட்டித் தொங்க விட்டு கதறக் கதறக் அடித்து துன்புறுத்திய விதம் பற்றி அயலவர்களைக் கேட்டால் இன்றும் தெரிந்துகொள்ளலாம்
அந்தக் காலப் பகுதியில் குறித்த சித்திரவதை முகாமிலிருந்து கேட்கும் அலறலும் அழு குரலும் இன்றளவும் தம் செவிகளில் ஒலித்துக் கொண்டிருப்பதாக அக்காலத்தில் அப்பகுதியால் சென்ற சிலர் இன்றும் கூறுகின்றனர்.
இந்த வதை முகாமில் அபூகனிபா,ஹசைன்,மர்கூம்,லத்தீப் ,றபீக் மற்றும் றகுமான் ஆகியோரே பஷீரின் வலது கரங்களாக செயற்பட்டு வந்த்துடன் இன்று அவர்களுள் சிலருக்கு போத்தலைக் கொடுத்தால் பலதையும் உளறுவதற்கு தயாராகவுள்ளனர்.
இத்தனை பஞ்சமா பாதகங்களையும் அச்சமின்றி செய்த பரிசுத்தவான் பஷீர்சேகுதாவூத் தன் தங்கை முறையான பெண் மீது காதல் கொண்டார்,அவள் அவரின் சித்தியின் மகள் (சாச்சாவின் மகள்).எது எவ்வாறாயினும் கொலையையும் கொள்ளையையும் தமது பொழுது போக்காக்க் கொண்ட பஷீருக்கு பெண் கொடுப்பதற்கு பெற்றவர்களோ சுற்றத்தார்களோ விரும்பவில்லை.
இதற்கெல்லாம் அடி பணியாத பஷீர் சேகுதாவூத் எனும் மா மனிதர் தன் காதலியின் பெற்றோரையும் குடும்பத்தினரையும் ஆயுதமுனையில் மிரட்டி அந்த அபலைப் பெண்ணை தனிமைப்படுத்தி தன் தோழர்களின் உதவியுடன் குடும்பத்தினரதோ பெண்ணின் பெற்றோரினதொ சம்மதமோ பங்குபற்றலோ இன்றி பஷீர் பலவந்த திருமணம் புரிந்தார்,
இந்நிலையில் 80 களின் பிற்பகுதியில் முஸ்லிங்களின் குரலான முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சி கிழக்கில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்ற ஈரோஸ் இயக்கத்துக்குபெரும் தலையிடியாக அமைந்த்து .
எனவே ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் பாலகுமாரின் ஆலோசனைக்கமைய பஷீர்சேகுதாவூத் முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியை தடுக்க மேற்கொண்ட முயற்சிகள் என்ன????அதற்கு அவருக்கு கிடைத்த விலை என்ன??????
இதனை அடுத்த தொடரில் எதிர்பாருங்கள்.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக