திங்கள், 6 மார்ச், 2017

அக்கா உக்கா வெற்றி!

ஏறாவூர் பிரிவிலுள்ள விளையாட்டுக்கழகங்களுக்கான   2017 ஆம் ஆண்டுக்கான அணிக்கு அறுவர்கொண்ட  ஐந்து  ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட  கிரிக்கட்போட்டியில் இம்மறை  சம்பியன் கிண்ணத்தை  அக்கா உக்கா
 விளையாட்டுக்கழகம்  வெற்றிக் கொண்டது.

ஏறாவூர் பக்தாத் கிரிக்கட்  மைதானத்தில் இடம்பெற்ற  இறுதிப் போட்டியில்
போட்டியில் ஜின்தா பாத் மற்றும்  அக்கா உக்கா அணிகள் களம் கண்டன.

நாணயச்சுழற்சியில் வென்ற  ஜின்தா பாத் அணி முதலில் துடுப்படுத்தாட களமிறங்கியது. இதனடிப்படையில்  முதலில்  துடுப்படுத்தாடிய ஜின்தா  பாத்  அணி  நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்கள் நிறைவில்  30 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது,

ஜின்தா பாத் அணி  சார்பில்   மொஹமட் பர்சான் 20 ஓட்டங்களைப்  பெற்றுக்கொண்டார்,

பந்து  வீச்சில்  அக்கா உக்கா அணி சார்பில்மொஹமட் ஆசிக்  3 விக்கட்டுக்களைகைப்பற்றினார். 31 ஓட்டங்கள் என்றவெற்றியிலக்கை  நோக்கி துடுப்படுத்தாடிய  அக்கா உக்கா அணி 3 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை  மாத்திரம்   இழந்து   வெற்றியிலக்கை  கடந்த்து .

அக்கா உக்கா  அணி சார்பில் மொஹமட் மூசி ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்களையும்  பௌசான’ 10   ஓட்டங்களையும்  பெற்று  அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர்,
போட்டியின் நாயகனாக மொஹட் ஆசிக்தெரிவானதுடன் தொடரின் நாயகனாக   கே. ஆர்   பௌசான்   தெரிவானமை  குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக