சனி, 4 மார்ச், 2017

கொடப்பிட்டிய ஸபீலில் ஈமான் மக்தப் விழா

அக்குரஸ்ஸ, கொடப்பிட்டிய (போர்வை) மத்ரஸத்துல் ஸபீலில் ஈமான் மக்தபின் முதலாம் கிதாபைப் பூர்த்தி செய்த மாணாக்கருக்கான  ஓராண்டு பூர்த்தி விழா இன்று (04) கொடப்பிட்டிய, ஸதாத் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.


நிகழ்வில், நாப்பாவல பௌஸியா அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர், அல்-ஹாபிழ் அல்-ஆலிமுல் பாழில் நுஸ்ரத் அலி (பாரி) கலந்து கொண்டு சிறப்புரையும், மத்ரஸத்துல் ஸபீலில் ஈமான் மக்தபின் தலைவர், அல்-ஹாஜ் எம்.எச்.எம். ஸமீன் ஆசிரியரின் உரையும் இடம்பெற்றது.

நிகழ்வில், ஜம்இய்யத்துல் உலமா சபையினால், மக்தப் முஅல்லிமுக்கு வழங்கப்படுகின்ற கேடயத்தை அல்-முப்தி எஸ்.எச். ஹிஜாஸ் (பாரி),  அல்-ஹாபிழ் அல்-ஆலிமுல் பாழில் நுஸ்ரத் அலி (பாரி)யிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

நிகழ்வில் தென் மாகாண மக்தப்களின் கண்காணிப்பாளர் நுவைஸ் மௌலவியும் கலந்து கொண்டார்.

கலைமகன் பைரூஸ் ஆசிரியரினால் நெறிப்படுத்தப்பட்ட இந்நிகழ்வின் ஈற்றில், மக்தபின் தனாதிகாரி அல்-ஹாஜ் ஏ.பீ.எப். கரீம் நன்றியுரையாற்றினார்.
படப்பிடிப்பு - ஜெயபாலசுந்தரம் சுதர்சன்
தகவல் - “கேஎப்”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக