தென் மாகாணத்திற்குப் புதிதாக மாகாண நிருவாக ஆணையாளராக
கே.யூ. சந்திரலால் நேற்றுமுன்தினம் , மாகாண நிருவாக
திணைக்களத்தில் பதவியேற்றார்.
முன்னாள்
நிருவாக ஆணையாளர்
திலேக்கா குடச்சி, பதவியேற்றம் பெற்று வேறு
இடத்திற்குச் சென்றதனால் ஏற்பட்ட பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்காகவே
இவ் ஆணையாளர் பதவிக்கு
சந்திரலால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் அவர் காணி ஆணையாளராக
சேவையாற்றியுள்ளார்.
இப்பதவியேற்பு
நிகழ்வில் தென் மாகாண முதலமைச்சரும் மாகாண நிருவாக அமைச்சருமான ஷான் விஜயலால் த
சில்வாவும் கலந்து கொண்டார்.
(கலைமகன் பைரூஸ்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக