வெள்ளி, 17 மார்ச், 2017

ஜனாதிபதியின் விருப்பத்துடன் தனது அமைச்சு பதவியில் மாற்றம் ஏற்படுமானால் ஏற்பேன் – மஹிந்த

ஜனாதிபதியின் விருப்பத்துடன் தனது அமைச்சு பதவியில் மாற்றம் ஏற்படுமானால் அதனை ஏற்க கடமைப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மஹிந்த அமரவீரவிற்கு நாட்டுக்கு சேவை செய்ய அதிக வாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி நேற்று (16) இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து
தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மஹிந்தானந்த கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தனக்கு வேறு ஒரு அமைச்சு பதவி வழங்கப்படுவது குறித்து என தான் இதுவரை அறியவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக