அவிஸ்ஸாவல தொகுதியின் ஸ்ரீசுக அமைப்பாளரும் கொடிகாவத்த பிரதேச சபையின்
முன்னாள் தலைவருமான பிரசன்ன சோலங்க ஆராச்சிக்கு, மூன்று பொலிஸ் அதிகாரிகளின்
பாதுகாப்பு ஏன் வழங்கப்பட்டுள்ளது? என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்,
பாராளுமன்றில் அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் கேட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் என்பதற்காக, உடனே அவருக்கு பொலிஸ்
பாதுகாப்புக் கிடைப்பது எவ்வாறு என வினவியுள்ள பாராளுமன்ற உறுப்பினர், மரண
அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்ற பாராளுமன்ற உறுப்பினரான தனக்குக் கூட அதனை
விடவும் குறைந்த பாதுகாப்பே எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு, இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும், தீர விசாரித்து பதில்
அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் அமைச்சர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக