வியாழன், 9 மார்ச், 2017

எந்தவொரு அரசியல் கட்சியைச் சாடுவதற்கும் கட்சி ஆரம்பிக்கப்படவில்லை - மொஹிதின் பாவா

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி எந்த அரசியல் கட்சியினை சாடுவதற்காகவோ எந்த ஒரு அரசியல் கட்சியின் பிண்ணனியிலோ தொடங்கப்படவில்லை.நாட்டின் பொருளாதாரத்தினை மேன்மைப் படுத்தவே நாம் முயற்சி  செய்கிறோம் இவ்வாறு கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார் 
 
நம் இலங்கை ஒரு விவசாய நாடு.அது நம்மில் யாருக்காவது நினைவிருக்கிறதா. எந்த ஒரு குழந்தையை கேட்டாலும் பிற்காலத்தில் மருத்துவர் ஆகனும் அல்லது பொறியாளர் ஆகனும் என்றே சொல்கிறார்கள். எந்த ஒரு குழந்தையாவது நான் வளர்ந்து நம் நாட்டு மக்களுக்கு உணவு படைக்கும் விவசாயி ஆவேன் என்று சொல்கிறதா.
 
“ என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில். ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில். ஒழுங்காய் பாடுபடு வயக்காட்டில். உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில் ”

உற்பத்தி இருந்தால்தானே நாட்டின் ஏற்றுமதி பெருகி இறக்குமதி குறையும். படித்து முடித்த கையோடு ஒரு சிலர் கணிணி முன்பு அமர்ந்து வெளிநாட்டு நிறுவனங்களுக்காக வேலை செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். இன்னும் சிலர் வெளிநாட்டில் படிக்க சென்று அங்கேயே வேலை செய்து அங்கேயே குடியுரிமையும் வாங்கி அங்கேயே தங்கிவிடுகின்றனர். இன்னும் சிலர் இங்கே நம் நாட்டில் கிடைக்கும் ஏதோ குறைந்த சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்ட ஏதோ ஒரு வேலையை பார்க்கின்றனர். மீதம் இருக்கும் பெரும்பாலான இளைய சமூகம் வீணாகவே இருந்து பொழுதை கழிக்கின்றனர்.

இன்னும் இதுபோன்ற பலதரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் இங்கே. அவர்களை சரிவர கையாள தெரியவில்லை இன்றைய அரசுக்கு. இருக்கும் விவசாய நிலங்களை தங்களுக்கு கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்திற்காக வெளிநாட்டு பணக்கார முதலீட்டார்களுக்கு விற்று விடுகின்றனர். கேட்க எவரும் இல்லை என்கிற தைரியம் தான் இவர்களை இப்படி செய்ய தூண்டுகிறது. ஆட்சியே நம்மிடம் இருக்கிறது. நம்மை யார் கேட்பார்கள் என்கிற துணிவுதான் இவர்களை இப்படி நடக்க செய்கிறது. இந்த தைரியமே இவர்கள் செய்யும் அனைத்து தவறுகளுக்கும் காரணம்.

நம் நாட்டில் குவிந்து கிடக்கும் நில வளங்களையும் மனித வளங்களையும் சரிவர கையாள தெரியாமலும் தங்கள் சுயநலத்திற்காக அவைகளை உபயோகப்படுத்திக்கொண்டும் இன்றைய அரசியல் கட்சிகளும் இன்றைய அரசும் நடத்தி வரும் நாடகங்களுக்கு இன்றே ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா. 

அரசியல் கட்சிகளின் அடிபிடிக்குப் பின்னால் காலத்தை வீணாக்கும் முஸ்லீம் சமூகம். இது நமது சமூகத்துக்கு பின் அட்வெய் அன்றி பிரதி பலன் ஒன்றும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக