சனி, 18 மார்ச், 2017

கட்டாய இடமாற்றத்தால் பாதிப்படைந்துள்ள தென்னிலங்கை தமிழ் மொழி மூல ஆசிரியர்கள்.

தேசிய பாடசாலைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கட்டாய இடமாற்றம் வழங்கும் நடவடிக்கை அரசாங்கத்தினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நடவடிக்கை மூலம் தென்னிலங்கையிலுள்ள தமிழ் மொழி மூல தேசிய பாடசாலைகளின் ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காரணம் தென்னிலங்கையில் உள்ள மூன்றுமாவட்டங்களிலும் மொத்தமாக தமிழ் மொழி மூலம் 5 தேசிய பாடசாலைகளே உள்ளன.

ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் இடையிலான தூரம் குறைந்தது 40 கிலோமீற்றரையும் விட அதிகம். இவ்வாறு வௌி பிரதேசங்களுக்கல்லாமல் அதே மாகாணத்திலுள்ள வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டாலும், நாளாந்தம் பல கிலோமீற்றர் தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை அல்லது குடும்பத்துடன் சென்று தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
நாளாந்தம் பயணம் செய்வது என்பது சாத்தியமற்றது. போக்குவரத்து பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும். அதேபோன்று தங்கியிருந்து பணியாற்றும் நிலை ஏற்பட்டால் மேலதிக செலவினங்கள். இதுபோன்ற பல பிரச்சினைகளுக்கு இவர்கள் முகங்கொடுக்க நேரிடும்.
ஆகவே தென் மாகாணத்திற்கு இந்த இடமாற்ற முறை பொருத்தமற்றது. எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்தி அந்த ஆசிரியர்களுக்கு தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.
முஹமட் பஸ்லி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக