சனி, 4 மார்ச், 2017

ஹாபிஸ் நசீர் கிழக்கின் வரப்பிரசாதமே - அமைச்சர் ஜோன் அமரதுங்க புகழாரம்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மீது ஜனாதிபதி மற்றும் பிரதமர் மிகுந்த நம்பிக்கையும் மரியாதையும் வைத்திருப்பதாக சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

இதனூடாக கிழக்கு மாகாண முதலமைச்சரினால் முன்வைக்கப்படும் பிரச்சி​ைனகள் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும்
மிகவும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை தீர்த்து வைப்பதற்கு அவர்கள் தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டார்.
ஏறாவூரில்  கிழக்கு முதலமைச்சரின் முயற்சியால் அழகிய தோற்றத்துடன் 17 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள  மர்ஹும்  செய்னுலாப்தீன் வாவிக்கரை  பூங்காவினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனைக் குறிப்பிட்டார்.

ஏறாவூர் வாவிக்கரை பூங்காவைப் போன்ற அழகிய பூங்காவொன்றை நான் இங்கு எங்குமே காணவில்லை இவ்வாறான பூங்காவொன்றை உங்களுக்குப் பெற்றுத் தருவதற்கு முழுக்காரணம் உங்கள்முதலமைச்சரின் முழுத் திறமையே என்பதில் சந்தேகமில்லை.

கிழக்கு மக்களுடைய பிரச்சினைகளை மிகத் தௌிவாக அறிந்து  அதற்குரிய தீர்வுக்கான வழிகளையும் யோசித்தே  சம்பந்தப்பட்டவர்களை அணுகி குறித்த பிரச்சினைகளை இலகுவாக தீர்க்கக் கூடிய திறன் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கு உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போது கிழக்கில் வேலையில்லாப் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் அது தொடர்பாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதமருடன் கலந்துரையாடியதையடுத்து தற்போது கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்க​ைள நிரப்புவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அது தொடர்பான கூட்டமொன்று எதிர்வரும் சில தினங்களில் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திறைசேரியில் நடைபெறவுள்ளதுடன்  இதன் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு பட்டதாரிகளை உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
நானும் என்னால் முடிந்தவரை அமைச்சரவையில் முதலமைச்சர் முன்னெடுக்கும் செயற்பாட்டுக்கு வலு சேர்க்கும் விதமாக முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளேன் என்பதுடன் கௌரவ நிதியமைச்சருடன் பட்டதாரிகள் தொடர்பில் குறிப்பிட்டு,முதலமைச்சர் சுட்டிக்காட்டிய   வெற்றிடங்களை நிரப்புவதற்கான நிதியை ஒதுக்குமாறும் கோரவுள்ளேன்,

கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் முன்னெடுக்கும் செயற்பாடுகளைப் பார்க்கும் போது அவரைப் போல ஒரு முதலமைச்சர் கிடைப்பதற்கு கிழக்கு மக்கள் அதிர்ஷ்டம் செய்துள்ளார்கள் என்றே சொல்ல வேண்டியுள்ளது.

அது மட்டுமல்லாமல் கிழக்கின் சுற்றுலாத்துறையை  அபிவிருத்தி செய்வதற்கு கிழக்கு முதலமைச்சர் முன்னெடுக்கும் முயற்சிகள் சுற்றுலாத்துறை அமைச்சர் என்ற வகையில் என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது,

மிகவும் தரமான சுற்றுலாத் தளங்களை அடையாளங்கண்டு அவற்றை அபிவிருத்தி செய்து அதனூடாக புதிய தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்துவது  தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் முன்னெடுக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கது என்பதுடன் அவரது  முன்யோசனைமிக்க ஆளுமை என்னையே வியப்பில் ஆழ்த்தியது,

கிழக்கில் முதலீடு செய்யுங்கள் என்ற ஒரு மாநாட்டை கிழக்கு முதலமைச்சர் ஒரு முறை ஏற்பாடு செய்திருந்தார்கள்,அன்றுதான் நான் இந்த முதலமைச்சரின் ஆளுமைக்க மிக்க திறமையைக் கண்டு கொண்டேன்,

எனவே இந்த மக்களுக்கான அபிவிருத்திகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை முன்னெடுக்கும் முதலமைச்சர் ஒருவர் உங்களுக்கு கிடைத்தமை உங்களின் வரப்பிரசாதமே.

ஆகவே  இந்த முதலமைச்சரைப் பயன்படுத்தி தமது மாகாணத்துக்குரிய சேவைகளை மென் மேலும் பெற்றுக் கொள்வதற்கு மக்களாகி நீங்கள் முன்வர வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்வின் போது முதலமைச்சரின் முயற்சியினால் மீனவ சமூகத்திற்கு 1 மில்லியனுக்கும் மேற்பட்ட மீன்பிடி வள்ளங்கள் மற்றும் மீனபிடி உபகரணங்கள் ஆகியன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக