வெள்ளி, 17 மார்ச், 2017

உலக கவிதை மற்றும் பொம்மலாட்ட தினம் மார்ச் 20 இல்!

உலக கவிதை தினம் மற்றும் உலக பொம்மலாட்ட தின கொண்டாட்டம் இம்முறை 2017 மார்ச் மாதம் 20 ஆம் திகதி மு.ப. 10.00 மணி தொடக்கம் பி.ப. 5.00 மணி வரை கொழும்பு -07 சுதந்திர சதுக்கத்தில் உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ எஸ்.பீ. நாவின்ன அவர்களின் தலைமையில் மற்றும் உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி
மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ பாலித தெவரப்பெரும் அவர்களின் பங்குபற்றலுடன் நடாத்த கலாசார அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அன்று மு.ப. 10.00 மணிக்கு கவிதை பற்றிய விரிவான சொற்பொழிவு நடைபெறவுள்ளதுடன் பேராசிரியர் சமந்த ஹேரத் கலாநிதி பிரணீத் அபேசுந்தர புத்ததாச கலப்பத்தி யமுனா மாலனி சமன்சந்திர ரத்னபிரிய ஆகியோர் சொற்பொழிவுகள் நிகழ்த்தவுள்ளனர். நண்பகல் 12.00 மணிக்கு இலங்கையின் பிரபல கவிஞர்கள் பங்குபற்றும் கவிதை களம் நடைபெறவுள்ளதுடன் பி.ப. 5.00 மணிக்கு பொம்மலாட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக