ஞாயிறு, 12 மார்ச், 2017

“தணிக்கை தகர்க்கும் தனிக்கை” ஏப்ரல் 17 இல்!

பிரபல ஊடகவியலாளரும், தமிழ் மிரர் பத்திரிகை ஆசிரியருமான ஏ.பி. மதனின், “தணிக்கை தகர்க்கும் தனிக்கை” எனும் ஆசிரியர் தலையங்கங்கள் அடங்கிய நூல் வெளியீடு எதிர்வரும் 17 ஆம் திகதி பி.ப. 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

கொழும்பு 10 டீ.ஆர் விஜேவர்த்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ள
இந்நிகழ்வுக்கு காலைக் கதிர் ஆசிரியர் ந. வித்தியாதரன் தலைமை தாங்க, இணைத் தலைமையை இந்திய டெகான் குரோனிகிள் பிரதியாசிரியர் திரு. பகவன் சிங் ஏற்பார்.


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகவும், எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் சிறப்பதியாகவும் கலந்துகொள்ளவுள்ள இந்நிகழ்வில், கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர் முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்வார். வழக்கறிஞர் அசோக்பரன் நூலாய்வினை மேற்கொள்ளவுள்ளார். இந்நிகழ்வை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர் தகேஷ் சீமோன் நெறிப்படுத்தவுள்ளார்.

(கேஎப்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக