வியாழன், 9 மார்ச், 2017

10 வருடங்கள் தொடர்ந்தேர்ச்சியாக பாடசாலைக்கு வருகைதந்து சாதனை!

வெலிகம, அறபா தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் எம்.ஆர். ரிம்லா ரியாஸ், கடந்த 10 வருடங்களாக தொடர்ந்தேர்ச்சியாக பாடசாலைக்கு வருகை தந்து சாதனை படைத்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்குச் சேர்ந்த்து முதல் 2017 ஆண்டு சா.த. தர வகுப்பில் கல்வி கற்கும்வரை, ஒரு நாளாவது விடுமுறை எடுக்காமல் பாடசாலைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இம்முறை க.பொ.த.சா.த பரீட்சைக்குத்
தோற்றவுள்ள ரிம்லா, தேசிய – மாகாண, மாவட்டப் போட்டிகள் பலவற்றிலும் கலந்து கொண்டு பல வெற்றிகளை ஈட்டிவருபவராவார். இவர் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையிலும் சித்தியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக